நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த பயங்கரம்.. 4 மாதமாக கபட நாடகம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!
நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த பயங்கரம்.. 4 மாதமாக கபட நாடகம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!
பணம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், நண்பரை கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர், சேமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரின் மகன் முத்துக்குமரன் (வயது 27). இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார். முத்துகுமாரனின் நெருங்கிய நண்பர் தமிழரசன்.
இதனிடையே, கடந்த செப் 19 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துக்குமரன், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் மகனை பல இடங்களில் தேடி அலைந்த பெற்றோர், தமிழரசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் முத்துகுமாரனை தேடி இருக்கிறார்.
இதையும் படிங்க: பையில் இருந்த மர்மம்.. விடாமல் துரத்திய நாய்.. கன்னியாகுமரியில் பகிர் சம்பவம்.!
நீதிமன்ற உத்தரவால் விசாரணை
முத்துக்குமரன் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் கிடப்பில் போட்டனர்.
வழக்கு விசாரணை தொய்வடைந்த காரணத்தால், முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்த, தமிழரசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கொடுக்கல்-வாங்கலில் கொலை
அப்போது, முத்துகுமாரனை தான் கொலை செய்து ஆற்றில் சடலத்தை புதைத்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ரூ.8 இலட்சம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், சம்பவத்தன்று முத்துகுமாரனை கொலை செய்து ஆற்றில் புதைத்தது அம்பலமானது. செப்.19 கொலை சம்பவம் நடந்த நிலையில், 4 மாதங்கள் கழித்து சம்பவம் உறுதியாகியுள்ளது.
உடல் தேடும் பணி தீவிரம்
மேலும், முத்துக்குமரன் தாமாக மாயமாகி, விசாரணை தன்பக்கம் திரும்ப கூடாது என முத்துகுமாரனின் வாட்ஸப்பில் தமிழரசன், முத்துகுமாரனை போல ஸ்டேட்டஸ் வைத்ததும் நடந்துள்ளது. தற்போது முத்துக்குமரன் உடலை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தினமும் டார்ச்சர்.. கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்துக் கொன்ற மனைவி.!