பையில் இருந்த மர்மம்.. விடாமல் துரத்திய நாய்.. கன்னியாகுமரியில் பகிர் சம்பவம்.!
பையில் இருந்த மர்மம்.. விடாமல் துரத்திய நாய்.. கன்னியாகுமரியில் பகிர் சம்பவம்.!
அடிக்கடி சண்டை
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மாரிமுத்து என்பவர், தனது மனைவி மரிய சந்தியா (வயது 30) மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமம் அருகே இருக்கும் பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்கள் இருவருக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
நடத்தையில் சந்தேகம்
தூத்துக்குடியில் உள்ள மீன் நிறுவனம் ஒன்றில் மரிய சந்தியா வேலை செய்து வந்துள்ளார். மாரிமுத்துவுக்கு தனது மனைவி மீது தேவையற்ற சந்தேகங்கள் இருந்து வந்துள்ளன. எனவே, தனது சந்தேகத்திற்கு மனைவியை பலியாக்கியுள்ளார் மாரிமுத்து. அடிக்கடி அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு வந்துள்ளார் மாரிமுத்து.
இதையும் படிங்க: "புருஷன் தொட்டா தப்பில்ல" 14 வயது சிறுமிக்கு பாழடைந்த வீட்டில் வைத்து நடந்த கொடுமை.!
பைகளில் அடைக்கப்பட்ட உடல்
இது மரிய சந்தியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த இருவருக்குள்ளும் பல மாதங்களுக்கும் மேலாக சண்டை சச்சரவு இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தில் இதுபோல அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மாரிமுத்து மரிய சந்தியாவை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதிலிருந்து ரத்தம் சிந்தியதால் தண்ணீரில் கழுவி விட்டு உடல் பாகங்களை 3 பைகளில் அடைத்து அதை கொண்டு சென்று வீச முயற்சித்துள்ளார்.
விடாமல் விரட்டிய நாய்
வீட்டை விட்டு அவர் வெளியில் சென்றவுடன் ரத்த வாடைக்கு தெருவில் இருந்த நாய் அவரை துரத்த ஆரம்பித்தது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து மாரிமுத்துவின் பையை வாங்கி பார்த்த போது அதில் சந்தியாவின் உடல் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "ராஜா வெளில வந்திடு" - அன்பாக அழைத்தும் வராத கேடி., கதவை உடைத்து உள்ளே சென்ற போலிஸ்.!