இராஜபாளையம்: "குடிக்காத பேரான்டி" - அறிவுரை கூறிய பாட்டி தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை.. 25 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!
இராஜபாளையம்: குடிக்காத பேரான்டி - அறிவுரை கூறிய பாட்டி தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை.. 25 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

மது, கஞ்சா போதைக்கு அடிமையான பேரனை கண்டித்த மூதாட்டி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இராஜபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 25 வயதுடைய இளைஞர், சொந்த பாட்டியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், தளவாய்புரம், நாயுடு தெற்குத்தெருவில் வசித்து வருபவர் நவநீதன். இவரின் மனைவி சரஸ்வதி (வயது 75). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நவநீதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தம்பதிகளுக்கு முத்துராஜா, பொன்னுத்தாயி, முருகேஸ்வரி, பாலசுப்பிரமணியன் என 4 பிள்ளைகள் இருக்கின்றனர்.
போதைக்கு அடிமை
இவர்களுக்கு திருமணம் முடிந்து, தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நான்காவது மகன் பாலசுப்பிரமணியன், அவரின் மனைவி விஜி சரஸ்வதியுடன் இருக்கின்றனர். தம்பதிகளுக்கு 22 வயதுடைய ஸ்ரீதர், 19 வயதுடைய சூர்யா என 2 மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் ஸ்ரீதர் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவர் ஆவார். இதனால் தம்பதிகள் மகன் போதையில் இருக்கும்போது பெரும்பாலும் பேசமாட்டார்கள்.
இதையும் படிங்க: பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!
மூதாட்டி கண்டிப்பு
சரஸ்வதியோ பேரன் வாழ்க்கையை இழந்து வருவதை எண்ணி வருந்தி, அவ்வப்போது கண்டித்து இருக்கிறார். இதனிடையே, கஞ்சா போதையில் இருந்த ஸ்ரீதரை சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், பாட்டியை கீழே தள்ளி அடித்து தேய்த்தார்.
கொடூர கொலை
மூதாட்டி வலியால் அலறிய நிலையில், ஸ்ரீதர் பாட்டியை அரிவாள்மனை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவரின் கால்களை பிடித்து வீட்டுக்கு வெளியே இழுத்துவந்து, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். பின் போதையில் உயிரிழந்த பாட்டியின் சடலம் அருகே படுத்து உறங்கினார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த தளவாய்புரம் காவல்துறையினர், ஸ்ரீதரை கைது செய்தனர். சரஸ்வதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கணவர் & குடும்பத்தினரின் தொல்லை; பெண் விபரீத முடிவு.. பெற்றோர் சோகம்.!