டிசம்பர் சம்பவத்துக்கு ரெடியா மக்களே? உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.!
டிசம்பர் சம்பவத்துக்கு ரெடியா மக்களே? உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழையானது, கடந்த அக். 15ம் தேதிக்கு மேல் தொடங்கி, தற்போது நல்ல மழையை தருகிறது. இதனை முன்னிட்டு வங்கக்கடல் பகுதியில் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தை கடந்து சென்ற பெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெள்ள சேதத்தினை ஏற்படுத்தியது. புயலின் மழை கொடுக்கும் மேகங்கள் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 40 செண்டிமீட்டருக்கு மேல் மழையை தந்தது.
இதையும் படிங்க: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தென்மாநிலங்களில் கனமழை
புதுச்சேரி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 51 சென்டிமீட்டர் அளவு மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நவமபர் மாதத்தில் அதிக மழை பெய்தது போல, டிசம்பர் மாதத்திலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பரில் இயல்பை விட 31% அதிக மழை தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் பெய்யும் எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம் என தெரியவருகிறது.
வழக்கமாக பெய்யும் இயல்பு மழைக்கே ஊரெல்லாம் வெள்ளக்காடாகும் நிலையில், வழக்கத்தைவிட 31% அதிக மழை கவனிக்க வேண்டிய விஷயம். இந்த கூடுதல் மழை ஒரேநாளில் பெஞ்சல் போல கொட்டித்தீர்த்தால், நிலைமை சில நாட்களுக்கு இன்னும் மோசமாகிப்போகும் என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: கரையை கடந்தும் வேலையை காட்டிய பெஞ்சல் புயல்.. அடித்து நொறுக்கும் மழை.!