திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அத்தை மகளுக்கு கத்தி குத்து.!! முறை மாமன் தலைமறைவு.!!
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அத்தை மகளுக்கு கத்தி குத்து.!! முறை மாமன் தலைமறைவு.!!
திருவாரூர் அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக படுகாயமடைந்த பெண்ணின் அத்தை மகனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
அத்தை மகள் மீது ஒருதலை காதல்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது அத்தை மகள் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் மகாதேவன் தனது அத்தை மகளை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். மேலும் அத்தை மகளை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டதாக தெரிகிறது.
திருமணத்திற்கு சம்மதிக்காததால் கத்திக்குத்து
மகா தேவனை திருமணம் செய்து கொள்ள அவரது அத்தை மகள் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகாதேவன் வீட்டில் ஆளில்லாத சமயத்தில் தனது அத்தை மகளை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அலறி துடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!
குற்றவாளிக்கு வலை
வீச்சு இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் காயமடைந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை குற்றவாளி மகாதேவனை தீவிரமாக தேடி வருகிறது. திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "அவ சரி இல்ல சார்: அதான் போட்டுட்டேன்.." ஒரு போன் காலில் பதறிய போலீஸ்.!! கடைசியில் ட்விஸ்ட்.!!