வெள்ளம் போனா என்ன? எங்களுக்கு சரக்குதான் முக்கியம் - டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்.!
வெள்ளம் போனா என்ன? எங்களுக்கு சரக்குதான் முக்கியம் - டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்.!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, பெஞ்சல் புயலாக வலுப்பெற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரமாக மாவட்டங்களில் பலத்த மழையை தந்தது. அதனைத்தொடர்ந்து, புதுச்சேரி அருகே கரையை கடந்து பின், நகர்வற்று நின்று புயல் காரணமாக கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான மழை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது.
வெள்ளத்தின் பிடியில் விழுப்புரம்
இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து. இந்த நிலையில், பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகரில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், விழுப்புரம் பேருந்து நிலையம் பெருமளவு வெள்ளை நீரால் சூழப்பட்டது. திண்டிவனம் நகருக்குள் காட்டாற்று வெள்ளமும் புகுந்தது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட மூதாட்டி; கயிறுகட்டி உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்.!
டாஸ்மாக் கடையில் குவிந்த நபர்கள்
தற்போது வெள்ள நிவாரண மீட்பு பணிகள் நடைபெற்ற வரும் நிலையில், வெள்ளம் வடிவதற்காக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. மீட்புப்பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் என பணிகள் தொடருகிறது. இதனிடையே, மரக்காணம் பகுதியில் வசித்து வரும் நபர்கள், 15 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து டாஸ்மாக்கில், வெள்ளநீரை கடந்து சென்று மதுபானம் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: சிலேட்டில் எழுதி உதவிகேட்ட மக்கள்; அரகண்டநல்லூரில் பதறவைக்கும் சம்பவம்.!