ராமஜெயத்தை கொன்றவர்கள் தான், ஜெயக்குமாரையும் கொன்றனரா.? பட்டியலிடப்படும் ஒற்றுமைகள்.!
ராமஜெயத்தை கொன்றவர்கள் தான், ஜெயக்குமாரையும் கொன்றனரா.? பட்டியலிடப்படும் ஒற்றுமைகள்.!
போலீசார் தீவிரம் :
மாநிலம் முழுவதும் நெல்லை ஜெயக்குமார் மரணம் பற்றிய தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் எப்படி இறந்தார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு அவரது வீட்டு வேலை ஆட்கள், குடும்பத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என்று பலரிடமும் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிக்கப்பட்ட உடல் :
போலீசாரும் அவரது இறப்பு பற்றி தகவல்களை சேகரிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அதை சரிவர கண்டறிய முடியவில்லை. ஜெயக்குமாரின் உடல் கிடந்த இடத்திலிருந்து பல்வேறு பொருட்களை போலீசார் சேமித்து இருக்கின்றனர். அவர் உடலானது எரிக்கப்பட்டிருப்பதால் யாராவது கேன்களில் பெட்ரோல் வாங்கினார்களா என்பதை கண்டறிய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
ராமஜெயம் & ஜெயக்குமார் மரண ஒற்றுமை :
இந்த நிலையில், 2012 இல் நடந்த அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலையும், ஜெயக்குமாரின் மரணமும் ஒன்று போலவே இருப்பதாக போலீசார் தரப்பில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் ராமஜெயத்தின் வாயில் துணி வைக்கப்பட்டு இருந்தது.
அதுபோல ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஷ் திணிக்கப்பட்டு இருந்தது. ராமஜெயத்தை கொன்று உடலை எரிக்க முயற்சி செய்துள்ளனர். ராமஜெயத்தின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. அதுபோல ஜெயக்குமாரின் கை கால்களும் கட்டப்பட்டு தான் இருந்தது.
இதையும் படிங்க: #BREAKING : ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை.! அதிர்ச்சி தகவல் வெளியீடு.!
ஒரே கூலிப்படையினரின் செயலா.?
எனவே, இரு கொலைகளுக்கும் பல்வேறு ஒற்றுமை இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சந்தேகிக்கப்படும் நிலையில், ஒரே கூலிப்படையினர் இந்த இரு கொலைகளையும் செய்திருக்கலாம் என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 2012 இல் நடைபெற்ற ராமஜெயத்தின் கொலை நடந்து 12 ஆண்டுகள் ஆகிய பின்பும் கொலை செய்தது யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் போலீசாருக்கு இந்த விஷயமும் துப்புதுலக்க கடினமானதாக தான் இருக்கிறது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சிலைக்கு முக்காடு போட்ட போலீஸ்.! இரவு நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.!