தமிழ்நாடு ரேஷன் கடை பொருட்கள் வீடு வீடாக விநியோகம் எப்போது? - அமைச்சர் சக்கரபாணி குட் நியூஸ்.!
தமிழ்நாடு ரேஷன் கடை பொருட்கள் வீடு வீடாக விநியோகம் எப்போது? - அமைச்சர் சக்கரபாணி குட் நியூஸ்.!

தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உட்பட பல பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, ரேஷன் அட்டை பொருட்கள் வீடு-வீடாக விநியோகம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
வீடுவீடாக ரேஷன் பொருட்கள்
இதனிடையே, இன்று சட்டப்பேரவையில் இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் வீடு-வீடாக கொடுக்கப்படுகிறது. பெங்களூர் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் பணியாற்றி வரும் நபர்களின் பொருட்கள், மளிகைக்கடையில் கொடுத்ததும் பெறப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: ஜாகிர் உசேனின் உடலை பெற உறவினர்கள் ஒப்புதல்; உதவி ஆணையர், ஆய்வாளர் விரைவில் சஸ்பெண்ட்.!
இதுதொடர்பாக தமிழ்நாடு ரேஷன் கடை அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆய்வுக்குப்பின்னர், அதன் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். திட்டம் நடைமுறைப்படுத்த சாத்தியக்கூறு இருந்தால், விரைந்து அதற்கான செயல்முறை முன்னெடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுனிதாவின் வருகைக்காக உதவிய அனைவர்க்கும் நன்றி - தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை.!