#Breaking: நாகூர் தர்கா கந்தூரி விழா; உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
#Breaking: நாகூர் தர்கா கந்தூரி விழா; உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், தர்காவில் கந்தூரி விழா சிறப்புடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவை அம்மாவட்ட மக்கள் வெகுவிமர்சையாக சிறப்பிப்பார்கள்.
உள்ளூர் விடுமுறை
இதனிடையே, நாகூர் தர்கா கந்தூரி விழாவில், முக்கிய நிகழ்வாக சந்தனம் பூசும் வைபவத்தினை முன்னிட்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: "தமிழகத்திற்கு உறுதுணையாக இருப்போம்" - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.!
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய, டிசம்பர் 21 அன்று வேலை நாளாக செயல்படும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேனியில் பரபரப்பு.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! கூலி தொழிலாளிக்கு 4 வருடம் ஜெயில்.!!