தேனியில் பரபரப்பு.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! கூலி தொழிலாளிக்கு 4 வருடம் ஜெயில்.!!
தேனியில் பரபரப்பு.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! கூலி தொழிலாளிக்கு 4 வருடம் ஜெயில்.!!
தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 39 வயது நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கியிருப்பது பொதுமக்களால் பாராட்டப்பட்டுள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி சம்பவம் நடந்த தினத்தன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே அந்த நபர் சிறுமியின் வீட்டிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி
அப்போது அருகில் இருந்தவர்கள் மர்ம நபரை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மர்ம நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் செய்யது அபுதாஹீர்(39) என தெரியவந்தது. மேலும் அந்த நபர் தேனி மாவட்டத்தின் கம்பம் மெட்டு பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இதையும் படிங்க: 18 வயது பள்ளி மாணவருக்கு எமனான மின்கம்பி; அறுந்து கிடந்தது தெரியாமல் கால் வைத்ததால் சோகம்.!
பரபரப்பு தீர்ப்பு
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்பின்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளிக்கு 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கட்டை விரலில் பாம்பு கடித்து பெண் உயிர் ஊசல்; மழை நேரத்தில் கவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!