முதல்வர் போஸ்டர் மீது செருப்பு வீச்சு.. வீடியோ எடுத்த நபர் கைது?
முதல்வர் போஸ்டர் மீது செருப்பு வீச்சு.. வீடியோ எடுத்த சிறுவன் கைது?
சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படம் ஒட்டப்பட்ட போஸ்டரை, மூதாட்டி ஒருவர் செருப்பு வீசிய சர்ச்சைக்குரிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகியது.
இந்த விஷயம் இணையதளத்தில் பெரும் விவாதப்பொருளை உண்டாக்க, அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள், வீடியோவை வைத்து தங்களின் கருத்துக்களை பகிரத் தொடங்கினர்.
இதையும் படிங்க: மக்களே கவனம்.. காய்ச்சலுக்கு மெடிக்களில் ஊசி செலுத்திய 18 வயது மாணவர் பலி; சென்னையில் சோகம்.!
இளைஞர் கைது?
இதனிடையே, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக, இளைஞர் பிரதீஷ் என்பவருக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் கடும் கண்டனத்தை குவித்துள்ளது.
மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் குறித்து தற்போது வரை தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் சார்பில் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: அடிதாங்காமல் தப்பி ஓடிய காதலன்.. 19 வயது கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில், அதிர்ச்சி தகவல்.!