கோவை உணவுத் திருவிழாவால் களேபரம்; கழுவி ஊத்தும் பொதுமக்கள்..!
கோவை உணவுத் திருவிழாவால் களேபரம்; கழுவி ஊத்தும் பொதுமக்கள்..!
மாவட்ட அளவில் தனியார் சார்பில் உணவு, கலைத்திருவிழாக்கள் நடைபெறுவது தொடருகிறது. ஒருசில தனியார் நிறுவனங்கள் சார்பில் முன்னெடுக்கப்படும் இவ்விழாக்களில், நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டும். இந்நிகழ்வில் பிரபலங்களையும் அழைத்து வருவதால், அங்கு கூட்டம் களைகட்டும்.
தனியார் பெயரில் திருவிழாக்கள்
மக்களின் வரவேற்பை பெறவேண்டும் என வார இறுதி நாட்களில் நடைபெறும் இவ்வாறான விஷயங்களில், அளவுக்கு அதிகமாக மக்களை திரட்டி, அங்கு வரும் மக்கள் ஏண்டா வந்தோம் என நினைக்கும் அளவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பணமும் கொடுத்துவிட்டு, கூட்டநெரிசலுடன் மனஉளைச்சலையும் சந்திக்கும் மக்கள், ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்புவார்கள்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் அதிர்ச்சி... பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா.!! பயிற்சி மருத்துவர் கைது.!!
கோவையில் நடைபெற்ற மோசடிகளில் இதுவும் ஒன்று என வருணிக்கும் நெட்டிசன்கள்
நபருக்கு கட்டணமாக ரூ.800
இவ்வாறான விஷயம் கோவையிலும் நடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொங்கு உணவு திருவிழா நடைபெற்ற நிலையில், அங்கு பயனாளர்களுக்கு கட்டணமாக ரூபாய் 800 வசூலிக்கப்பட்டது. இதனிடையே, விழா ஏற்பாட்டாளர்கள் சரிவர நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை என்றும், இதனால் உணவு கூட சரிவர வாங்கி சாப்பிட இயலவில்லை என்றும் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதிகளவு குவிந்த மக்கள்
தங்களுக்கு எதுவுமே கிடைக்காததாகவும், பலரும் காத்திருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்ட சென்றனர். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தனியார் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இவ்வாறான செயல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொடிசியா வளாகத்தில் குவிந்துவிட்ட நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் அதிருப்தி சூழ்நிலை உண்டாகியது.
கோவை உணவுத்திருவிழாவால் மனம் நொந்துபோன நபரின் வருந்தவைக்கும் பேச்சு
விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதம்
இதையும் படிங்க: 'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!