'பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்' விநியோகத்தில் முறைகேடு.. கண்டுகொள்ளுமா அரசு.?!
'பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்' விநியோகத்தில் முறைகேடு.. கண்டுகொள்ளுமா அரசு.?!
கடந்த சில வருடங்களாகவே ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை, ஏலக்காய், சிறுபருப்பு போன்ற பொருட்கள் அடங்கியிருக்கும். இத்துடன் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
உதவித்தொகை இல்லை
ஆனால், இந்த வருடம் அரசு தரப்பில் உதவித்தொகை எதுவும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்படுமா என்பதும் சந்தேகம் தான். இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான டோக்கன் இன்று முதல் தமிழகத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை வீடு வீடாக சென்று விநியோகிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழக மக்களே தயாரா.?! இன்று முதல்.. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்.!
ரேஷன் கடை ஊழியர்களின் சோம்பேறித்தனம்
ஆனால், பல ஊர்களிலும் டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்காமல் அதை வாங்கிக் கொள்ளப் பொதுமக்களை ரேஷன் கடைக்கு தான் வரச்சொல்லி அழைக்கின்றனர். இந்த டோக்கன்களை வாங்க முண்டியடித்துக்கொண்டு சென்று கூட்ட நெரிசல்களில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
நெரிசல்களில் சிக்கித்தவிக்கும் மக்கள்
அதிலும் டோக்கன்களை வாங்க ஒரு நாளும், பரிசுத்தொகுப்பை வாங்க இன்னொரு நாளும் என்று 2 நாட்கள் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு பேசாமல் ஒரே நாளில் பரிசு தொகுப்பை கொடுத்து விட்டு போகலாம் என்றும் அவர்கள் புலம்புகின்றனர். அதிலும் வயதானவர்கள் தான் இதில் அதிகப்படியாக பாதிக்கப்படுகின்றனர்.
அமைச்சர் சக்கரபாணிக்கு கோரிக்கை
இந்த டோக்கன் முறை அனைத்து ஊர்களிலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தமிழக அரசு அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் எனவும், இது போன்ற முறைகேடுகளை அமைச்சர் சக்கரபாணி கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை.. களைகட்ட போகும் விற்பனை.!