கட்சி நிர்வாகிகள் பதவிக்கு பணமா? நோ., நெவர் - புஸ்ஸி ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!
கட்சி நிர்வாகிகள் பதவிக்கு பணமா? நோ., நெவர் - புஸ்ஸி ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தவெக நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வாட்சப் உரையாடல் குறித்த பதிவுகள் வெளியாகி அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொட்டுது இருந்தது.
இந்நிலையில், பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுக்கப்படுவதாக எழுந்த விவகாரத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரத்தில் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உறுதியான உரை ஒன்றை ஆற்றி இருந்தார்.
கடுமையான நடவடிக்கை
இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் தெளிவாக சொல்கிறேன், யாராக இருந்தாலும், பதவிக்காக பணம் வாங்கினார்கள் என்றால் கட்சியில் இருந்து எந்தவிதமான பதவி பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும்" என பேசினார்.
இதையும் படிங்க: அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த தவெக நிர்வாகிகள்.. புல்லட் பாண்டிகள் புல்தடுக்கி பரிதவித்த சோகம்.!
வாட்சப் உரையாடல் வெளியாகிய காரணத்தால், புஸ்ஸி ஆனந்த் உடனடியாக விழுப்புரம் சென்று நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசா? மத்திய அரசா? - அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!