அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த தவெக நிர்வாகிகள்.. புல்லட் பாண்டிகள் புல்தடுக்கி பரிதவித்த சோகம்.!
அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த தவெக நிர்வாகிகள்.. புல்லட் பாண்டிகள் புல்தடுக்கி பரிதவித்த சோகம்.!
2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தை தோற்றுவித்து, அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், மிகப்பிரம்மாண்டமான முறையில் விக்கிரவாண்டி பகுதியில் கட்சியின் தொடக்க மாநாடு நடத்தி இருந்தார்.
கட்சியின் கொள்கை, கோட்பாடு போன்ற விஷயங்களை எடுத்துரைத்த விஜய், தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து உழைப்பை வெளிப்படுத்த வேண்டும், கட்சியின் எண்ணங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசா? மத்திய அரசா? - அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!
மக்களை பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமையுங்கள்
இன்று சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்தும் போராடி வரும் கிராம மக்களை நேரில் சந்திக்க சென்றார். அங்கு மாநில, மத்திய அரசுகளின் திட்ட வளர்ச்சியை வரவேற்பதாகவும், மக்களை பாதிக்காத வண்ணம் உள்ள இடத்தை தேர்வு செய்து விமான நிலையம் அமைத்துக்கொள்ளுங்கள் எனவும் பேசி இருந்தார்.
பள்ளத்தில் விழுந்த நிர்வாகிகள்
இதனிடையே, பரந்தூர் செல்லும் விஜய்க்கு கட்சியினர் வரவேற்பு அளித்த நிலையில், பலரும் தங்களின் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்தவாறு சென்றனர். அப்போது, கட்சி நிர்வாகி ஒருவர் புல்லட் வாகனத்தில் அதிவேகமாக பறந்த நிலையில், சாலையின் வளைவை கவனிக்காமல் பள்ளத்தில் தடுமாறி விழுந்தனர். இருவரும் அதிவேகத்தில் சென்றபோது, வளைவு பகுதியை கவனிக்காமல் அலட்சியமாக சென்றதால், லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்த காணொளி வைரலாகி வருகிறது.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம்? - இறுதி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!