"ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!
ஐயோ கொன்னுட்டாங்களே... துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிரபல ரவுடி தலை இல்லாமல் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலையாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முண்டமாக கிடந்த ஆண் சடலம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு வாய்க்கால் பகுதியில் தலை இல்லாத நிலையில் முண்டமாக ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை தலையில்லாத முண்டத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தினர்.
பிரபல ரவுடி கொலை
இந்நிலையில் காவல்துறை விசாரணையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ்(32) என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்.? அவரை கொலை செய்தவர்கள் யார்.? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட நபர் ரவுடி என்பதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா.? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!
இதையும் படிங்க: போதை கொடுமை... உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி.!! போலீஸ் விசாரணை.!!