#BigBreaking: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் அம்பலம் - அமலாக்கத்துறை அறிவிப்பு.!
#BigBreaking: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் அம்பலம் - அமலாக்கத்துறை அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டாஸ்மாக் நிறுவனம், மாநில அளவில் மதுபான விற்பனையை செய்து வருகிறது. இதற்காக மதுபான உற்பத்தி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் தலைமை அலுவலகம், அதன் தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஏற்கனவே மதுவிலக்கு துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மோசடி வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே தான், அவரின் நண்பர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
ரூ.1000 கோடி ஊழல்
இந்நிலையில், அமலாக்கத்துறையின் சோதனையில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துளளது தெரியவந்துள்ளது. செலவுகளை அதிகப்படுத்தி, விற்பனை புள்ளிகளில் மோசடி செய்து ஊழல் நடந்துள்ளது. இதனால் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: டெல்லி, சத்திஸ்கர் போல தமிழ்நாட்டில் மாபெரும் மதுபான ஊழல்? அண்ணாமலை சூசகம்.!
மதுபான பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரையில் அதிகபட்சம் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது என்ற விஷயமும் கண்டறியப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் வாயிலாக தனியார் நிறுவனங்கள் முறைகேடுகள் செய்துள்ளன. எம்.ஆர்.பி தொகையை விட அதிக தொகை வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள், முரண்பாடு தகவல்
மது உற்பத்தி நிறுவனங்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டுள்ளது. டெண்டர், பார் உரிமம் தோற்பன விசயத்திற்கு வாங்கப்பட்ட ஆவணம் போன்ற விஷயங்களில் ரூ.30 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக் டெண்டர் விண்ணப்பதாரரின் விபரம் முரண்பாடுகளுடன் இருக்கின்றன. பார் லைலேஷன்ஸ் உரிமம் வழங்குவதிலும் மோசடி நடந்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் என ஜிஎஸ்டி இல்லாத நபர்களுக்கு கூட வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. போலியான பில் உருவாக்கி, ரூ.100 கோடி அளவில் கருப்பு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. போலியான ஆவணங்களும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி பெண் பரிதாப பலி; நீலகிரியில் சோகம்.!