எமன் விடுப்பில் இருந்ததால் தப்பிய இளைஞர்; 2 பேருந்துக்கு நடுவே நசுங்கியும் உயிர்தப்பிய பகீர் காட்சிகள்.!
எமன் விடுப்பில் இருந்ததால் தப்பிய இளைஞர்; 2 பேருந்துக்கு நடுவே நசுங்கியும் உயிர்தப்பிய பகீர் காட்சிகள்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சம்பவத்தன்று தாமரங்கோட்டை பகுதியில் பயணம் செய்தது.
அப்போது, தனியார் பேருந்து சென்றதும், இளைஞர் பரத் என்பவர் சாலையை கடக்க தயாராக இருந்தார். பின்னாலேயே அரசுப்பேருந்து ஒன்று வேகமாக வந்தது.
முந்திச்செல்ல முயன்று அதிர்ச்சி
அரசுப்பேருந்து ஆபத்தான வகையில் தனியார் பேருந்தை முந்த முயன்றது. அதாவது, சாலையின் வலப்புறம் சென்று பேருந்து முந்திச்செல்ல முற்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: அன்னபூரணி அரசு அம்மாவின் புது அவதாரம் எதற்காக? பரபரப்பு பேட்டி.. விபரம் உள்ளே.!
இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர், இரண்டு வாகனத்தின் நடுவில் சிக்கிக்கொண்டார். நல்வாய்ப்பாக அவர் இரண்டு வாகனத்திலும் லேசாக மோதி உரசியபடி கீழே விழுந்து உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பான பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரூ.16 கோடி பாலம் எங்கே? திறந்து 3 மாதங்களில் மூடுவிழா கண்ட ஆற்றுப்பாலம்.. திருவண்ணாமலையில் சம்பவம்.!