உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யதீங்கா - 'ஒன்றிணைவோம் வா' தமிழ்நாடு பாஜகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்.!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யதீங்கா - 'ஒன்றிணைவோம் வா' தமிழ்நாடு பாஜகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்.!

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து கருத்து முரணில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு - மாநில அரசு கருத்தியல் ரீதியாக மோதி வருகிறது.
மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா, ஏதேனும் ஒரு மூன்றாவது மொழியை படிக்கவும், உயர்கல்வியை ஊக்குவிக்கவும் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்படுகிறது. பிஎம்ஸ்ரீ உட்பட முமொழிக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் ரூ.5000 கோடி நிதி இழப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம் என கூறி இருந்தார்.
இதையும் படிங்க: "கலெக்டர், எஸ்.பி எல்லாம் நான் சொல்றதைத்தான் கேட்கணும்" - திமுக மா.பொ ஆடியோ லீக்.!
முக ஸ்டாலின் கோரிக்கை
அதே நேரத்தில், திமுக தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. மேலும், முதற்கட்டமாக திமுக மாணவரணி சார்பில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசினார்.
அவர் பேசுகையில், "மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பக்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்க வேண்டும். தமிழ்நாடு பாஜகவினரும் மாநில மக்களுக்காக ஏதேனும் செய்ய நினைத்தால், இந்த விவகாரத்தில் எங்களுடன் நில்லுங்கள். உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய வேண்டாம். மத்தியில் இருந்து வரும் மிரட்டலுக்கு பயம்கொள்ள நாங்கள் அதிமுக இல்லை, இது திமுக" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: 'அப்பா'-வை படுகேவலமாக வருணித்து ஜெயக்குமார்.. கழுவி ஊற்றி பரபரப்பு பேச்சு.!