டிடிவி தினகரன் பங்கேற்ற கூட்டத்தில் "கடவுளே அஜித்தே" கோஷம்; திகைத்துப்போன ஆதரவாளர்கள்.!
டிடிவி தினகரன் பங்கேற்ற கூட்டத்தில் கடவுளே அஜித்தே கோஷம்; திகைத்துப்போன ஆதரவாளர்கள்.!

திருப்பூர் மாவட்டத்தில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்ற நபர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார்.
"கடவுளே அஜித்தே"
இந்த நிகழ்ச்சியின்போது, டிடிவி தினகரன் உரையாற்றிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு பரிசுகளை பெற வந்திருந்த மாணவர்கள், இளைஞர்களில் சிலர் திடீரென "கடவுளே அஜித்தே" என குரல் எழுப்ப தொடங்கினர்.
இதையும் படிங்க: #Breaking: தாயின் கண்முன் ஆற்று நீரில் மூழ்கி மகள் துள்ளத்துடிக்க பலி.. துணிதுவைக்கச் சென்றபோது நடந்த துயரம்.!
இவர்களுடன் பிற நபர்களும் சேர்ந்து அதே கோஷத்தை எழுப்பிய நிலையில், சில நொடிகள் செய்வதறியாது திகைத்த டிடிவி தினகரன், கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்தார். அவர்களும் திடீர் கோஷத்தால் அதிர்ந்துபோயினர்.
பின் மாணவர்களின் குரல் அடங்கியதும், தனது பேச்சுக்களை தொடர்ந்தார். கடவுளே அஜித்தே என்ற கோஷம், நடிகர் அஜித் ரசிகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
சர்ச்சையால் சங்கம் களைப்பு
ஒரு காலத்தில் திரும்பும் திசையெல்லாம் ரசிகர் மன்றம் வைத்திருந்த நடிகர், அதனால் எழுந்த சர்ச்சை காரணமாக அதனை கலைத்தது உத்தரவிட்டார். இன்று படத்தில் நடித்தாலும், பிரஸ்மீட், ப்ரோமோஷன் என எந்த பணியிலும் கலந்துகொள்ளாமல் அவரின் வேலைகளை கவனித்து வருகிறார்.
அவரின் நடிப்பில் ஆர்வம் கொண்ட ரசிகர்கள் படத்தை பார்த்து மகிழ்ந்து வந்தாலும், சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் அதனை பொதுவெளியில் பெருமை செயலாக கருதி இவ்வாறான கோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: #JustIN: கணவன் - மனைவி தகராறில் கொடூரம்.. குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.. உறவினர்கள் கண்ணீர்.!