தவெக கட்சியில், விஜயின் உதவியாளர் மகனுக்கு மா.செ பொறுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தவெக கட்சியில், விஜயின் உதவியாளர் மகனுக்கு மா.செ பொறுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து, அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நியமனத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆறாம் கட்டமாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியது.
ஐந்து கட்டமாக 95 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், இன்று 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகியது. அதன்படி, இன்று வெளியான பட்டியலில் விஜயின் முன்னாள் ஓட்டுநர், இந்நாள் உதவியாளர் ராஜேந்திரன் என்பவரின் 27 வயது மகன் சபரிநாதனுக்கு மாவட்ட செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: "திமுக பெண்களை ஏமாற்றிவிட்டது.. நாமும் ஒட்டு போட்டோமே" - நடிகர் விஜய் பரபரப்பு வீடியோ.. மகளிர் தின வாழ்த்துடன் ட்விஸ்ட்.!
தென்சென்னை மாவட்ட செயலாளர்
ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகிறது. ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என இதுவரை விஜய்க்காக களமிறங்கி செயல்பட்டவர்கள் பலரும் பொறுப்புகளை கேட்டு மனக்கசப்பு நிலையை எதிர்கொண்டனர். ஆனால், கட்சியின் தலைமை உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனிடையே தான் சபரிநாதனுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் உள்ள தெற்கில் இருக்கும் மேற்கு மாவட்டமாக பிரிந்து, விருகம்பாக்கம் தொகுதிக்கு என சபரிநாதனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இவரின் தந்தை விஜயுடன் பயணித்தாலும், சபரிநாதனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.!