16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.!
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.!
பாலியல் தொல்லை புகாரில், தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில், கடத்தூர் நகர பொறுப்பாளராக இருக்கிறார்.
இதையும் படிங்க: "கலெக்டர், எஸ்.பி எல்லாம் நான் சொல்றதைத்தான் கேட்கணும்" - திமுக மா.பொ ஆடியோ லீக்.!
கடத்தூர் கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சுதாகரின் உறவினர் ஆவார்.
போக்ஸோவில் கைது
இதனிடையே, சிறுமி கடந்த பிப்.23 சிறுமி தனது வீட்டில், நள்ளிரவு 2 மணியளவில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த சுதாகர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட, சுதாகர் தப்பிச் சென்றார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல்துறையினர் சுதாகரின் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை இன்று கைது செய்தனர். போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: போதையில் வம்பு வழக்கு வந்ததும் பம்மு.. போலீசிடம் வம்பிழுத்த 2 பெண்கள் கைது.!