"என் பாய் பெஸ்ட்டியை, என்னோடு சேர்த்து வையுங்க போலீஸ்".. குடித்துவிட்டு பெண் ரகளை.!
என் பாய் பெஸ்ட்டியை, என்னோடு சேர்த்து வையுங்க போலீஸ்.. குடித்துவிட்டு பெண் ரகளை.!
மது போதையில் வந்த பெண்
35 வயது பெண் ஒருவர், நேற்று அதிகாலை 1 மணியளவில் சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றுள்ளார். நல்ல மது போதையில் இருந்த அவர் அங்கிருந்த பெண் காவலர் ஒருவரிடம், "என்னுடன் உல்லாசமாக இருந்த ஆண் நண்பர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்ற பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள்." என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட அந்த பெண் காவலர், "காலையில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளியுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்." என்று கூறியுள்ளார். ஆனால், இதை பொருட்படுத்தாத அந்த பெண் ஓடிச்சென்று வெளியில் நின்ற தனது ஸ்கூட்டரில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலை எடுத்து ஊற்றி தீ வைக்க முயன்று எனக்கு நியாயம் வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அந்தப் பெண் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினார்.
இதையும் படிங்க: உல்லாசத்துக்குத்தான் நீ., குடும்பத்துக்கு அவ.. கள்ளக்காதலியை திருமணம் செய்ய மறுத்த நபர்.. பெண் குமுறல்.!
உல்லாசத்துக்காக விரித்த வலை
இரவு ரோந்து பணிக்கு மற்ற காவலர்கள் சென்று விட்டதால் உடனடியாக எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஒரு கிளப் டான்சராக இருந்து வருகிறார். இவருக்கு அழகிரி நகரை சேர்ந்த அறிவழகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான்.
கிளப்பில் அந்த பெண்ணை சந்தித்த அறிவழகன் அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் அவருக்கு அனுமதி கொடுத்துள்ளார். சம்பவ நாளில் திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்திய போது, "முடியாது நாம் இருவரும் இப்போது போல எப்போதும் ரகசியமாக சந்தித்துக் கொள்ளலாம்." என அறிவழகன் கூறியுள்ளார்.
எச்சரித்த போலீஸ்
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார், அந்த பெண்ணின் கணவர் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பேருந்துக்கு அடியில் கண்ட காட்சி.. பரபரவென ஓடிய பெண்.. கொத்தாக பிடித்த பயணிகள்.!