திருமணமான 9 மாதத்தில் சோகம்... போதை ஊசி மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட 21 வயது இளைஞர்.!!
திருமணமான 9 மாதத்தில் சோகம்... போதை ஊசி மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட 21 வயது இளைஞர்.!!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர், திருமணம் செய்து கொண்ட 9 மாதத்தில் போதை ஊசி செலுத்தி இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் ராஜ்(21). குதிரைகளுக்கு முடி திருத்தும் தொழிலாளியான இவர் அனுசுயா என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
போதை பழக்கத்திற்கு அடிமை
இந்நிலையில் கௌதம் ராஜ் கஞ்சா மற்றும் போதை ஊசி போன்றவற்றை உபயோகித்து வந்ததாக தெரிகிறது. மேலும் இந்த பழக்கங்களுக்கு அவர் அடிமையாக இருந்ததால் இதுகுறித்து அவரது மனைவி அனுசுயா கண்டனம் தெரிவித்திருக்கிறார். எனினும் கௌதம் ராஜ் இந்த பழக்கங்களை விட்டதாக தெரியவில்லை .
இதையும் படிங்க: செல்போனில் ரகசிய பேச்சு... தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை.!!
மர்ம மரணம்
இந்நிலையில் நேற்று முன்தினம் கௌதம் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டின் மொட்டை மாடியில் போதை ஊசியை கையில் செலுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கௌதம் ராஜ் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கௌதம் ராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் கௌதம் ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போதை ஊசி மற்றும் மருந்துகளை கைப்பற்றிய காவல்துறை கௌதம் ராஜின் மனைவி மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: துயர சம்பவம்... வீடியோ கேம் விளையாட்டால் விபரீதம்.!! உயிரை மாய்த்துக் கொண்ட 15 வயது சிறுவன்.!!