உக்ரைனுக்கு பேரிடி.. கைவிரித்த ட்ரம்ப்? அழைப்பு விடுத்த புதின்.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.!
உக்ரைனுக்கு பேரிடி.. கைவிரித்த ட்ரம்ப்? அழைப்பு விடுத்த புதின்.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.!
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் பல ஆண்டுகளை தாண்டியும் தொடருகிறது. இந்த போரினால் இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யா பிராந்திய பாதுகாப்பு கருதி, நேட்டோ படையுடன் உக்ரைன் இணையும் முடிவை எதிர்த்து போரிட்டு சென்றதாக அறிவித்தது. அமெரிக்காவாவில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அரசு, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்தது.
போரை முடிவுக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரம்
அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதும், இராணுவ உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இறுதி நேரம் குறித்த ட்ரம்ப்.. ஹமாஸுக்கு உச்சகட்ட எச்சரிக்கை..!
இந்நிலையில், நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சுமார் ஒன்றரை மணிநேரம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இருதரப்பு அமைதியை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதவிகள் நிறுத்தம்?
மேலும், அதிபர் ட்ரம்ப் பேசும்போது, உக்ரைன் நேட்டோ படையுடன் இணைய சாத்தியமில்லை என கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை முற்றிலும் நிறுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், நேட்டோ படையுடன் உக்ரைன் இணையும் முடிவுக்கும் அவர் எதிர்ப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறித்து. இதனால் ஜோ பைடனை நம்பி போரில் இறங்கிய உக்ரைன், தனித்து விடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ரஷியாவுக்கு வருகை தரவேண்டும் எனவும் ரஷிய அதிபர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 55 பயணிகள் பரிதாப மரணம்.!