நடுரோட்டில் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்; காரணம் என்ன? அரசுக்கு கடும் எதிர்ப்பு.!
நடுரோட்டில் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்; காரணம் என்ன? அரசுக்கு கடும் எதிர்ப்பு.!
கடுமையான ஹிஜாப் கட்டுப்பாடுகளால் அதிருப்தியடைந்த கல்லூரி மாணவி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நூதன போராட்டம் நடத்தினார்.
மதவாத ஆட்சி நடைபெற்று வரும் ஈரானில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு என பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்; வலியோடு மனம்நெகிழ்ந்து நன்றி கூறிய ரைடர்.. நெகிழவைக்கும் வீடியோ.!
சமீபகாலமாக ஈரானில் ஹிஜாப் சரிவர அணியாத பெண்கள் வயது வித்தியாசமின்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதைபடுத்தப்பட்டதும், அதனால் ஏற்பட்ட மரணங்களும் பெரும் அதிர்வலையை உண்டாக்கி அரசுக்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்தி இருந்தன.
மாணவியின் நூதன எதிர்ப்பு
மக்கள் எப்படியான போராட்டத்தை கையில் எடுத்தாலும், அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, ஈரானில் இருக்கும் இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழக்கத்தில் படித்து வரும் மாணவி, சரிவர ஹிஜாப் அணியவில்லை என காவல்துறையினரால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த மாணவி, மேலாடை மற்றும் உள்ளாடையுடன் பொதுவெளியில் தோன்றி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால் மாணவியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: "பீர் முக்கியம் பாஸ்" விபத்தில் தப்பிய அடித்த நொடியே பாருக்குள் நுழைந்த நபர்.!