#Breaking: நாட்டை விட்டு வெளியேறினார் சிரிய அதிபர் பஷர்.. அதிபர் மாளிகை சூறையாடல்.!
#Breaking: நாட்டை விட்டு வெளியேறினார் சிரிய அதிபர் பஷர்.. அதிபர் மாளிகை சூறையாடல்.!
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உள்நாட்டு போர் காரணமாக, சிரியா அவதிப்பட்டு வந்தது. கடந்த 2011ம் ஆண்டு முதல் சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத்-க்கு ரஷியா ஆதரவு தெரிவித்து, கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவியது.
மறுபக்கம் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், மத்திய கிழக்கில் சிரியா மூலமாகவும் பதற்றம் நீடித்து வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்ற முயற்சி எடுத்து வந்தனர்.
இதையும் படிங்க: சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிப்படை.. நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?.. கைவிட்ட ரஷ்யா.!
இதனிடையே, 50 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் நீடித்து வந்த பஷர் அல் ஆசாத் குடும்பம், நாட்டில் இருந்து வெளியேறியது. இதனால் டெமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர்.
இராணுவ சிறைச்சாலைகளும் தகர்க்கப்பட்டு, கிளர்ச்சிக்கு ஆதரவாளர்கள் விடுதலை அடைந்தனர். சிரியா மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிரியா அதிபர் மாளிகைக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள், அதிபரின் மாளிகையை சூறையாடி இருக்கின்றனர். அதிபர் மாளிகைக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களை அவர்கள் அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.
ஜோர்டான், ஈரான் ஆகிய நாடுகள் தங்களின் எல்லைகளை மூடி இருக்கின்றது.
50 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் சிரியா அரசு வீழ்ந்தது
இதையும் படிங்க: சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிப்படை.. நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?.. கைவிட்ட ரஷ்யா.!