சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிப்படை.. நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?.. கைவிட்ட ரஷ்யா.!
சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிப்படை.. நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?.. கைவிட்ட ரஷ்யா.!
சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வந்த சிறிய விடுதலை கிளர்ச்சிப்படை, அந்நாட்டின் அரசாட்சியை கைப்பற்றும்பொருட்டு முன்னேறி வருகிறது. இதனால் அரசுக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரை கைப்பற்றியுள்ளதாகவும், அந்நகரம் விடுதலை அடைந்ததாகவும் கிளர்ச்சிப்படையினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: வானில் நிகழும் அற்புத காட்சி.. மக்களே காண தவறவிடாதீங்க.. விபரம் உள்ளே.!
இதனிடையே, சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகரில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் வெளியேற்றிவிட்டதாகவும், இதனால் தலைநகரை கைப்பற்றும் நோக்குடன் கிளர்ச்சியாளர்கள் படை முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிரியாவை கைப்பற்றலாம்
சேட்னாயா நகரில் உள்ள முக்கிய சிறை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரேநாளில் 4 நகரங்களும் கிளர்ச்சிப்படை கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது. இதனால் விரைவில் சிரியாவில் ஆட்சியை கிளர்ச்சிப்படை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைவிட்ட ரஷ்யா, அமெரிக்கா
சிரியா அரசுக்கு ஆதரவாக ஈரான் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் ஹிசபுல்லா படை சிரியா அரசுக்கு உதவி செய்ய விரைந்துள்ளது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது என அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் கூறியுள்ளதால், இன்றைய ஜோ பைடன் அரசு மௌனம் காக்கிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு, அமெரிக்கா அம்மண்ணில் இருந்து வெளியேறிய பின்னர் ஆட்சியை கைப்பற்றியது. இன்று சிரியா தனது ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடலை தூய்மைப்படுத்த தவளை பானம்; வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு நடிகை பலி.. மதபோதகர் பரிதாபங்கள்.!