×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஒரு முத்தம் கொடுத்தது தப்பாயா.?.." கிஸ்ஸிங் ஃபீவரால் உயிருக்கு ஆபத்தா.? இதன் பாதிப்புகள் என்ன.!!

ஒரு முத்தம் கொடுத்தது தப்பாயா.?.. கிஸ்ஸிங் ஃபீவரால் உயிருக்கு ஆபத்தா.? இதன் பாதிப்புகள் என்ன.!!

Advertisement

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் முத்தம் கொடுத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு முத்தக்காய்ச்சல் என்றழைக்கப்படும் கிஸ்ஸிங் டிசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த வியாதி எவ்வாறு பரவுகிறது.? இதன் அறிகுறிகள் என்ன,? என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

முத்தம்

அதிகமான அன்பின் வெளிப்பாடாக முத்தம் பார்க்கப்படுகிறது. இந்த முத்தத்தால் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 23 வயதான நெவி மெக்ரெவி என்ற பெண் பட்டப்படிப்பு முடித்ததை கொண்டாடும் விதமாக நண்பர்களுடன் மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு உற்சாகமாக நடனமாடிய அந்தப் பெண் பாரில் இருந்த அறிமுகம் இல்லாத நபருடன் நடனமாடி உதட்டோடு உதடு வைத்து முத்தத்தை பகிர்ந்திருக்கிறார்.

கிஸ்ஸிங் டிசிஸ்

கொண்டாட்டம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவருக்கு  கிலேண்டுலார் ஃபீவர் என்றுழைக்கப்படும் சுரப்பி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயானது எப்ஸ்டைன் பார் என்ற வைரசால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த நோயானது ஒருவர் எச்சில் மற்றொருவருக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய முத்தத்தின் மூலம் பரவுவதால் முத்தக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... துடிதுடிக்க பலியான 9 குழந்தைகள்.!! உலகை உலுக்கிய சோக நிகழ்வு.!!

முத்தக்காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது

முத்தக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய எப்ஸ்டைன் பார் வைரஸ் ஒருவரது எச்சிலில் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலும் இந்த காய்ச்சல் முத்தத்தின் மூலம் பரவினாலும் ஒரே சிகரட்டை பகிர்ந்து கொள்ளுதல் ஒரே ஸ்பூனை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஒரே கப்பில் இருவரும் காபி அல்லது தேநீர் பருகுதல் போன்றவற்றாலும் பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நோயின் தாக்கம்

பெரும்பாலும் இந்த முத்தக்காய்ச்சல் 90 சதவீதம் நபர்களை பெரிதும் பாதிக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கின்றனர். மேலும் இந்த காய்ச்சலின் தீவிர தன்மையால் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

கவனமாக இருக்க வேண்டியவர்கள் யார் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் குழந்தைகள் போன்றோர் இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை முத்தமிட அனுமதிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... துடிதுடிக்க பலியான 9 குழந்தைகள்.!! உலகை உலுக்கிய சோக நிகழ்வு.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kissing Disease #world #Britain #Epstein Bar Virus #Nevi Mecrevi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story