பண்ணைபுரம் டூ லண்டன் சிம்பொனி.. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..
சாக்லேட் பாய் அப்பாஸின் பரிதாப நிலை....! சினிமாவில் ஏற்பட்ட தோல்விதான் காரணமா..!?

கோலிவுட் திரையுலகில் சாக்லேட் பாயாக 1990முதல் 2000 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். அப்பாஸ், 'காதல் வைரஸ்' என்ற திரைபடத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
இதன்படி, இவர் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஹே ராம், படையப்பா, பம்மல் கே சம்பந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் இறுதியாக நடித்த இரு படங்கள் இவருக்கு வெற்றியை தராததால் கைவசம் வைத்திருந்த மற்ற 17 படங்களின் ப்ரொடியூசர்களும் பின்வாங்கினர். இதுவே இவரது சினிமா வாழ்க்கையில் பலத்த அடியாக இருந்தது.
இது போன்ற நிலையில் நடிகர் அப்பாஸுக்கு ஜீன்ஸ் மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் மேனேஜரின் சூழ்ச்சியால் இந்த வாய்ப்பும் கைவிட்டு போனது. சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவினால் மனமுடைந்து போன அப்பாஸ் நியூசிலாந்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
இதன்பின்பு அப்பாஸ் ஒரு பேட்டியில், நியூசிலாந்துக்கு சென்ற புதிதில் கார் மெக்கானிக்காகவும், டாய்லெட் கிளீன் செய்யும் வேலையிலும், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களிலும் வேலை செய்து இருக்கிறேன். இந்த வேலைகள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்தேன். மேலும் ஹார்பிக் விளம்பரத்தில் நான் நடித்ததை குறித்து இங்கு யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று மன வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.