சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர்களில் மிகப்பெரிய அளவிலான கவனத்தை பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசன். இவரின் பேரன் துஷ்யந்த். இவர் ஈசன் ப்ரொடெக்சன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: இயக்குனரின் பெயரைச்சொல்லி நடிகையிடம் அத்துமீறல்.. இளவயதில் நடந்த மோசமான அனுபவம்.. நடிகை ஓபன் டாக்.!
இதனிடையே, நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில், ஈசன் ப்ரொடெக்சன் நிறுவனம் ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்து வழங்குவதாக இருந்தது. படத்தை தயாரிக்க, கடன் வாங்க சிவாஜி கணேசனின் வீடு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
வட்டிடன் செலுத்த உத்தரவு
தனபாக்கியம் என்ற தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. இதற்கு வட்டி 30 % ஆகும். நீண்ட ஆண்டுகள் ஆகியும் கடன் தொகை வராத நிலையில், நிதிநிறுவனம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மாசத்தியஸ்தராக நியமிக்கப்பட்டு, ரூ.9.39 கோடி வட்டியுடன் செலுத்த உத்தரவிடப்பட்டது.
இதற்காக தயாரிப்பு நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி பொது ஏலத்தில் பணத்தை பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், நீதிபதி அப்துல் வழக்கை விசாரித்தார். அவர் தற்போது வரை கடனுக்கான பதில் மனுவை வழங்காமல் அலட்சியப்படுத்தியதால், சிவாஜி வீடு ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ரூ.15000 ஆட்டைய போட்டாங்கப்பா.. அழுவாகா? சிரிக்காவா? - சீரியல் நடிகருக்கு விபூதி அடித்த மோசடி ஆசாமி.!