#Breaking: நடிகர் அஜித் குமார் பயணித்த கார் விபத்து; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தல.. ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு.!



actor-ajith-kumar-racing-car-accident

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரனுடன் குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், குட் பேட் அக்லீ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று, கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது. 

துபாயில் தல அஜித்

அதேபோல, விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் காரணமாக படவெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே, ஜனவரி 11 மற்றும் 12 ம் தேதிகளில் நடைபெறவுள்ள கார் பந்தய நிகழ்ச்சியில், நடிகர் அஜித் குமார் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் துபாயில் முகாமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கார் விபத்தில் சிக்கினார்.

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் கார் பந்தய போட்டியின் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகர் அஜித், எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டார். அவர் சாதாரணமாக எழுந்து நடக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!