Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



ajith-kumar-s-good-bad-ugly-movie-release-date


தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி என மெகாஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இபபடத்தை வழங்குகிறது. 

அஜித் ரசிகர்களுக்கு திரைவிருந்து

தேவிஸ்ரீ பிரசாத் இசையில், அபிநந்தன் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. 2025 ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ரூ.300 கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படம், அஜித் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith Kumar

நடிகர் அஜித்தின் 63வது திரைப்படமான இப்படத்தை ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. 

இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!

படம் வெளியீடு தேதி அறிவிப்பு

இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு, குட் பேட் அக்லீ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று வெளியிடப்படுவதாக, படத்தின் தயாரிப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மார்க் ஆண்டனி மூலமாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாருக்கு மங்காத்தா திரைப்படத்தை போல மிகப்பெரிய வெற்றியை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; மனம்திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பேசியது என்ன?