#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Pushpa 2: புஷ்பா 2 படத்தின் வெளியீடு தேதி மாற்றம்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று இருந்த பல பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஊ சொல்றியா மாமா, என் சாமி, ஸ்ரீவள்ளி ஆகிய பாடல்கள் பலரையும் ரசிக்க வைத்தன.
செம்மரக்கடத்தல் அரசியல் படம்
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக் கடத்தல், அதன் பின்னணியில் உள்ள அரசியல், கேங்ஸ்டரிசம் போன்ற கதையம்சத்துடன் வெளியாகி இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமும் படம்பிடிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்தில் இணைந்த அனிமல் பட வில்லன்?; எகிறும் எதிர்பார்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
டிசம்பரில் வெளியீடு
கடந்த சுதந்திர தினம் அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் தாமதம் காரணமாக படம் 6 டிசம்பர் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே எஞ்சி இருக்கின்றன.
தேதி மாற்றம்
இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் மாதம் 06ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக, டிசம்பர் 05ம் தேதி வியாழக்கிழமை வெளியாகிறது. இந்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருப்பதால், அவர்கள் கொண்டாட்டத்தில் எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
The wait shortens. Okka roju takkuvaindi... 😉😎
— Pushpa (@PushpaMovie) October 24, 2024
The Biggest Indian Film #Pushpa2TheRule GRAND RELEASE WORLDWIDE ON 5th DECEMBER, 2024 ❤🔥#Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/rEg74qDJuo
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்தில் இணைந்த அனிமல் பட வில்லன்?; எகிறும் எதிர்பார்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!