திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புஷ்பா 2 படத்தில் இணைந்த அனிமல் பட வில்லன்?; எகிறும் எதிர்பார்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று இருந்த பல பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஊ சொல்றியா மாமா, என் சாமி, ஸ்ரீவள்ளி ஆகிய பாடல்கள் பலரையும் ரசிக்க வைத்தன.
செம்மரக்கடத்தல் அரசியல் படம்:
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக் கடத்தல், அதன் பின்னணியில் உள்ள அரசியல், கேங்ஸ்டரிசம் போன்ற கதையம்சத்துடன் வெளியாகி இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமும் படம்பிடிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: 'ரெட்ட தல' படப்பிடிப்பு நிறைவு; பிரியாணி பரிமாறி மகிழ்ந்த அருண் விஜய்.!
டிசம்பரில் வெளியீடு
கடந்த சுதந்திர தினம் அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் தாமதம் காரணமாக படம் 6 டிசம்பர் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகமும் 2021 ல் டிசம்பர் மாதமே வெளியாகி இருந்தது.
சவுரவ் இடம்பெற்றுள்ளார்?
படம் வெளியாக இன்று முதல் 50 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், படத்தில் அனிமல் திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சவுரவ் சச்தேவா இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
Animal Villain in Pushpa 2 🤯🔥
— Sri Tej (@Alluarjuncult83) October 16, 2024
Sukku is cooking something big !! #50DaysToPushpa2Storm #Pushpa2TheRule pic.twitter.com/rI7Vi3L0KD
படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு
''ITS A WRAP..💥#pushpa2🔥🔥🔥''
— Adopted Son Of Kerala (@ASOKERALA) October 16, 2024
- Actor @actorbrahmaji via Insta@alluarjun #Pushpa2TheRule #50DaysToPushpa2Storm pic.twitter.com/lrO4T94HlI
இதையும் படிங்க: மருத்துவமனையில் ரஜினி.. நாளை வெளியாகிறது வேட்டையன் பட ட்ரைலர்.!