மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டாரா இந்த 56 வயது பிரபல நடிகர்.! தீயாய் பரவும் தகவல்.!
திரைப்படங்கள் சீரியல்கள் என பிஸியாக இருந்து வருபவர் நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ். அவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பிரித்விராஜ் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் கண்ணான கண்ணே தொடரில் ஹீரோயின் மீரா கதாபாத்திரத்திற்கு அப்பாவாக நடித்து வருகிறார்.
பப்லு பிரித்விராஜ்க்கு பீனா என்பவருடன் திருமணமாகி, 25 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இந்த நிலையில் பப்லு அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் மகனையும் அவரே பார்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பப்லு மலேசியாவில் தனது தொழிலை தொடங்க உதவியாக இருந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.