#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!



  Actor Saif Ali Khan  

மராட்டிய மாநிலம் மும்பை, பாந்த்ராவில் வசித்து வரும் நடிகர் சைப் அலி கான். இவர் பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூரின் கணவர் ஆவார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் சைப் அலிகானுக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். 

இதனிடையே, நேற்று நள்ளிரவு நேரத்தில் சைப் கானின் வீட்டில் புகுந்த நபர், திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை தடுக்க மேற்பட்ட அலி கானுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. பின் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்றுவிட்டார். 

இதையும் படிங்க: "நீதான் என் உயிருன்னு சொன்னா நம்பாதீங்க., எல்லாம் பொய்" - நடிகை அனுபமா காதல் அட்வைஸ்.!! 

கத்தி தாக்குதலில் காயமடைந்த நடிகரை மீட்ட குடும்பத்தினர், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்தபோது, வீட்டிற்குள் குறிப்பிட்ட நேரத்தில் யாரும் வந்து செல்லாமல் இருக்க, வீட்டில் உள்ளவர்கள் அவரை குத்தி தப்பி சென்றார்களா? என்ன நடந்தது? என அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 

விஐபி தங்கும், பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட இடத்தில் திருடன் நுழைந்தது எப்படி? என சந்தேகம் வலுத்துள்ளது. 

இதையும் படிங்க: சினிமாலதான் காமெடியன், நிஜத்துல பலே வில்லன்.. நடிகையின் பரபரப்பு குற்றசாட்டு.. ஊட்டியில் நடந்தது என்ன?.!