"நீதான் என் உயிருன்னு சொன்னா நம்பாதீங்க., எல்லாம் பொய்" - நடிகை அனுபமா காதல் அட்வைஸ்.!! 



  Actress Anupama Parameswaran Advice on Love 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், ப்ரேமம் திரைப்படத்தின் வாயிலாக மொழிகளை கடந்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதனைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் கொடி, தள்ளிப்போகாதே, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பைசன், ட்ராகன், லாக்டவுன் ஆகிய படங்கள் விரைவில் வெளியாயிருகின்றன. 

Actress anupama

நச்சுக்காதலில் சிக்காதீங்க;

இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதல் குறித்து கூறுகையில், "எனது உயிர் நீதான், நீயில்லாமல் நான் இல்லை என சொல்லக்கூடிய நச்சுக்காதலில் மாட்டிக்கொண்டு இருப்போர் அனைவரும், தயை கூர்ந்து அதனை விட்டு ஓடுங்கள் என்பதே எனது அறிவுரை ஆகும். எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என கூறுவதே மிகப்பெரிய பொய் ஆகும்" என பேசினார்.

இதையும் படிங்க: ஒளியும் வழியும் பிறக்கட்டும் - நடிகை இந்துஜாவின் பொங்கல் 2025 வாழ்த்து.!

இதையும் படிங்க: ஜெயிலர் 2 உறுதி; வெளியானது டீசர் வீடியோ.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!