ஒரே ஆண்டில் ரூ.2500 கோடி வருமானம் பார்த்த நடிகர் ஷாருக்கான்; உண்மையிலேயே கிங் கான் தான்.!



actor-shah-rukh-khan-gross-net-income-2500-crore-inr-in

 

ஹிந்தி திரையுலகில் கிங் (King Khan) கானாக வலம்வரும் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan), நடப்பு ஆண்டில் அடுத்தடுத்த 3 படங்களில் நடித்து இருந்தார். 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரூ.250 கோடி செலவில் தயாராகி, கடந்த 25 ஜனவரி 2023 அன்று வெளியான பதான் (Pathaan) திரைப்படம் சர்வதேச அளவில் ரூ.1000 கோடிகளை கடந்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது. 

இப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 7, 2023 அன்று அட்லீ இயக்கத்தில், ரூ.300 கோடி செலவில் உருவாகி வெளியான ஜவான் (Jawan) திரைப்படம், ரூ.1148 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்தது.

King Khan

அதனைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 22ம் தேதி, ராஜ்குமார் கிராணி இயக்கத்தில் உருவான டங்கி (Dunki) திரைப்படமும் ரூ.400 கோடி வசூலை நெருங்கி வருகிறது. 

இதில் மேற்கூறிய 3 படங்களிலும் ஷாருக்கான் தயாரிப்பாளராகவும் இருந்தார். அவரின் மனைவி கௌரி கான் பெயரில் இருக்கும் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் படங்களை தயாரித்து வழங்கி மாபெரும் வசூலை பெற்று இருந்தது. 

ஜவான் மற்றும் பதான் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகின. டங்கி திரைப்படம் ஹிந்தியில் மட்டும் தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

King Khan

இந்நிலையில், இவ்வாறான அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த ஷாருக்கான், ஒரே ஆண்டில் ரூ.2500 கோடிகளை கடந்து வருமானம் பார்த்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் முதல் இடத்தை பெற்றுள்ளார்.