நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, பெஞ்சல் புயலாக வலுப்பெற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரமாக மாவட்டங்களில் பலத்த மழையை தந்தது. அதனைத்தொடர்ந்து, புதுச்சேரி அருகே கரையை கடந்து பின், நகர்வற்று நின்று புயல் காரணமாக கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான மழை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது.
வெள்ளத்தின் பிடியில் விழுப்புரம்
இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து. இந்த நிலையில், பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகரில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், விழுப்புரம் பேருந்து நிலையம் பெருமளவு வெள்ளை நீரால் சூழப்பட்டது. திண்டிவனம் நகருக்குள் காட்டாற்று வெள்ளமும் புகுந்தது.
இதையும் படிங்க: #Breaking: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கு நீதிமன்ற காவல்; அதிரடி உத்தரவு.!
நடிகர் சிவகார்த்திகேயன் உதவி
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் மக்கள் 2 நாட்கள் உணவு, உடை, தண்ணீர் இன்று தவித்துப்போயினர். தற்போது வெள்ளம் வடியத்தொடங்கி மீட்பு பணிகள் நடைபெற்று, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, பெஞ்சல் புயல் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் பணத்திற்கான காசோலையை வழங்கினார். நடிகரின் செயல் மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!