தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!



Thambi Ramaiah Rajakili Movie Released on 27 Dec 2024 


வீ ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர்கள் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஸ்வீதா, மியாஸ்ரீ, டேனியல் பாலாஜி, எம்.எஸ் பாஸ்கர், பழ. கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ராஜகிளி.

இசையமைப்பு, இயக்கத்தை கையில் எடுத்த தம்பி ராமையா

இப்படத்தின் இசையமைப்பு பணிகளை தம்பி ராமையா மேற்கொண்டுள்ளார். கேதார்நாத், கோபிநாத் ஒளிப்பதிவு பணிகளையும், சுதர்சன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இடத்தின் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், பல்வேறு சூழ்நிலையினால் 2 ஆண்டுகள் ரிலீசுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

படம் டிசம்பர் 27 அன்று வெளியீடு

இதனிடையே, ராஜாகிளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், பாடல் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் டிசம்பர் 27, 2024 முதல் திரையரங்கில் வெளியாகிறது. இந்த அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: The Sabarmati Report: தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.! 

இதையும் படிங்க: #Breaking: கஞ்சா கும்பலுடன் தொடர்பு? நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் விசாரணை.!