அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; மனம்திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பேசியது என்ன?



Actor Sivakarthikeyan PRess Meet at Tiruchendur Murugan Temple 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படம் ஆகும்.

இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனிடம், ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

இதையும் படிங்க: 'மனம் கொத்தி பறவை' நடிகையா இது.? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?!

சிவகார்த்திகேயன் பேட்டி:
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்தியேன், "அண்ணா பல்கலை., விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நாம் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக முருகனின் அறுபடை வீட்டுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன். கடந்த மாதம் கூட திருச்செந்தூர் வர முயற்சி செய்தேன்.

ஆனால், மழை-வெள்ளம் காரணமாக பயணம் தள்ளிப்போனது. தற்போது திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்துள்ளேன். அமரன் வெற்றியடைய காரணமாக இருந்த அனைவர்க்கும் நன்றி. அண்ணா பல்கலை போல துயரம் ஏதும் நடக்க கூடாது. அதையே நான் கடவுளிடம் வேண்டுகிறேன்" என கூறினார். 

இதையும் படிங்க: கைகள் நடுங்க, சரிவர பேச முடியாமல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால்; என்னதான் ஆச்சு? ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!