கைகள் நடுங்க, சரிவர பேச முடியாமல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால்; என்னதான் ஆச்சு? ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!



Madha Gaja Raja Movie 12 January 2025 Release 

 

சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட், சுப்புராஜா, மணிவண்ணன், ஜான் கொக்கைன், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி உட்பட பலர் நடித்து உருவாகி இருந்த திரைப்படம் மத கஜ ராஜா. 

பொங்கல் 2025 க்கு ரிலீஸ்:
இப்படம் கடந்த 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே, 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 12 ஜனவரி 2025 அன்று படம் திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் படிங்க: கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!

உடல்நலக்குறைவுடன் ப்ரோமோஷனில் விஷால்

இதனிடையே, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், அதற்கு படக்குழுவினர் வருகை தந்து இருந்தனர். அப்போது, நடிகர் விஷால் காய்ச்சலுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். கைகள் நடுங்க, சரியாக பேச முடியாமல் தவித்தவரை, தொகுப்பாளினி நேர்த்தியாக சமாளித்து விஷாலை கவனித்துக்கொண்டார். 

விஷால் விரைந்து உடல்நலம் தேறி வரவேண்டும் என பலரும் ஆறுதல் தெரிவிக்கின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டும், விழா மேடைக்கு வருகை தந்த விஷால்

இதையும் படிங்க: தனுஷின் இட்லி கடை பட பர்ஸ்ட்லுக் வெளியீடு; லிங்க் உள்ளே.!