'விடுதலை 2' படத்தில் ஹீரோவாக நடித்த சூரிக்கு இவ்வளவு தானா சம்பளம்.?! 



actor soori salary in viduthalai part 2

வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரி எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பு

தமிழ் சினிமாவில் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே இருந்து வந்தவர் சூரி. அந்த நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க கூட அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் தான் இருந்து வந்தது. அப்படி இருந்த சூரியின் வாழ்க்கையை ஹீரோவாக புரட்டிப் போட்டவர் வெற்றிமாறன் தான்.

இதையும் படிங்க: ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!

ஹீரோவாக அசத்திய சூரி

 ஹீரோவாக நடிக்குமளவு சூரிக்கு திறமை இருக்குமா? என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியவர் வெற்றிமாறன். கடந்த ஆண்டு இதே கூட்டணியில் விடுதலை 1 வெளியாகியது. இதில், தனது திறமையான நடிப்பால் சூரி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இந்த திரைப்படத்தின் கதை களம் மிகவும் விறுவிறுப்பாக செல்ல, இளையராஜாவின் இசை படத்திற்கு பெருமளவில் கை கொடுத்தது.

Actor soori

விடுதலை 2

மிகுந்த எதிர்பார்ப்புடன் முதல் பாகம் முடிந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்காக அப்போது இருந்தே ரசிகர்கள் காத்திருக்க துவங்கினர். இந்த நிலையில், விடுதலை 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்து இருக்கிறார். இதில் சூரியுடன் சேர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, கென் கருணாஸ், மஞ்சு வாரியர், கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், தமிழ், இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர். 

சூரியின் சம்பளம்

மஞ்சு வாரியரும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலை 2 திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரி வாங்கியதாக கூறப்படும் சம்பளம் ரூபாய் 8 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சம்பளம் அதிகமா குறைவா என்று ஒரு புறம் விமர்சனம் இருந்தாலும், சூரிக்கு வெற்றிமாறன் இந்த வாய்ப்பை கொடுத்ததே அவரது வாழ்வில் ஒளி ஏற்றி வைத்ததற்கு சமம் என்கின்றனர் திரையுலகினர்.

இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!