திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரத்னம் பட ரிலீசுக்கு சிக்கல்? புரட்சித்தளபதியின் கட்டப்பஞ்சாயத்து குற்றசாட்டு: திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி.!
நடிகர்கள் விஷால், பிரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்னம் (Rathnam).
ஹரி இயக்கத்தில், கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கார பாண்டியன் ஆகியோரின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாளை (மார்ச் 26, 2024) முதல் படம் திரையரங்கில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் வெளியீடுக்கு திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உரிமைகோரும் நபர்கள், படத்தை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், டிடி ஏரியா சங்கத்தில் இல்லாத நபர் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாருக்கு ஏற்ப சங்க தலைவர் மீனாட்சி உட்பட நிர்வாகிகள் பேசவும் மறுக்கின்றனர். படத்தின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் வெளியீடை முடக்க நினைக்கின்றனர் என விஷால் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.