நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!



Actor Vishal Health Update 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தயாரிப்பாளராகவும் பணியாற்றி பல படங்களை விநியோகம் செய்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம், அஞ்சலி உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருந்த மதகஜ ராஜா திரைப்படம், சில காரணங்களால் வெளியிட இயலாமல் போனது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தபின், விஷாலின் மதகஜ ராஜா திரைப்படம் 12 ஜனவரி 2025 அன்று வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் நடந்தபோது, நடிகர் விஷால் உடல்நலக்குறைவுடன் annikalchiyil கலந்துகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: கைகள் நடுங்க, சரிவர பேச முடியாமல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால்; என்னதான் ஆச்சு? ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!

கைகள் நடுக்கத்துடன், வார்த்தைகள் தளர்ந்தபடி அவர் பங்கேற்றது ரசிகர்களை பெரிதளவில் உலுக்கியது. தொடர்ந்து அவர் நலம்பெற வேண்டி பலரும் தங்களின் பிரார்த்தனையை முன்வைப்பதாக தெரிவித்தனர். அதேபோல, தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் சுபாவம் கொண்ட விஷால், நலம்பெற வேண்டும் என அவரால் பலன் பெற்றவர்கள் பிரார்த்தித்தனர்.

இதனிடையே, அவரின் காய்ச்சலுக்கு முழுமையான ஓய்வு தேவை என மருத்துவ குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் விஷால், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்த அறிவிக்கை கடிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கைகள் நடுங்க, சரிவர பேச முடியாமல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால்; என்னதான் ஆச்சு? ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!