மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: நடிகர் விஷால் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்; அதிர்ச்சியில் திரையுலகம், கொந்தளிப்பில் ரசிகர்கள்.!
விஷாலின் வீடு மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், அவரது வீட்டு கண்ணாடிகள் உடைந்தன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் முன்னாளில் பணியாற்றி இருந்தார். இவர் சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அவரது வீட்டின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் அங்குள்ள கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக விஷாலின் மேலாளர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகவலை அறிந்த விஷால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.