நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
#சற்றுமுன்: அரசியலில் களமிறங்குகிறேனா??.. நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தனது அரசியல் பயணம் குறித்து நடிகர் விஷால் மனம்திறந்து பேசியுள்ளார்.
வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் டிச. 22ம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் லத்தி. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு ப்ரமோஷன் விழாவில் இன்று படக்குழு கலந்துகொண்டது.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், "அரசியலில் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்று மக்களுக்கு சேவை செய்வதை விடவும், சினிமாவில் போட்டியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தவும், அதன் மூலமாக என்னால் இயன்ற சமூக சேவையை அறக்கட்டளை வாயிலாகவும் செய்து வருகிறேன்.
ஆகையால், நான் அரசியலில் போட்டியிடப்போவதும் இல்லை. சினிமாவில் மட்டுமே நான் ஒவ்வொருவருடனும் போட்டியிடுவேன்" என்று தெரிவித்தார். முன்னதாக நடிகர் விஷால் பல சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விஷாலின் கருத்துக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.