மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்றுவரை இளமையாக இருக்கும் நடிகை நதியாவின் முதல் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா! சும்மா அசந்து போயிருவீங்க!
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கி இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாக இருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவர் 1985ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து அவர் உயிரே உனக்காக , நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட பல படங்களில் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் அதிக படங்கள் நடித்துள்ளார். பின்னர் அவர் 1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவர்களுக்கு சனம், ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நீண்ட நாட்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நடிகை நதியா மீண்டும் 2004ம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
Stumbled upon my first calendar shoot from 1986 📸📆 #ThrowbackThursday pic.twitter.com/w8VY5iBb1b
— Actress Nadiya (@ActressNadiya) December 3, 2020
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நதியா அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் குக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை நதியா தற்போது 1986ம் ஆண்டு பிரபல காலண்டர் படத்திற்காக முதன்முதலாக நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அன்று முதல் இன்று வரை அழகு துளியும் குறையாமல் இளமையாக உள்ளீர்கள் என கூறி வருகின்றனர்.