ஜெயிலர் 2 உறுதி; வெளியானது டீசர் வீடியோ.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!



jailar-2-announcement

கடந்த 2023ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், மிர்னா மேனன், சிவராஜ்குமார், தமன்னா, மோகன்லால், சுனில், வசந்த் ரவி, யோகிபாபு உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். 

ஜெயிலர் மெகா வசூல்

கலாநிதி மாறன் தயாரிப்பில், ரூ.200 கோடி செலவில், அனிருத் இசையில் உருவாகிய ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை கடந்து வசூல் செய்தது. படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் இருந்தது.

இதையும் படிங்க: Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!

ஜெயிலர் 2 

 

இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், அனிரூத் இசையில் உருவாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம்; இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!